Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மூப்படைந்து வரும் மக்களால் ஆசியப் பெருளாதார வளர்ச்சி மெதுவடையும்: பண நிதியத் தலைவர்

மூப்படைந்து வரும் மக்களால் ஆசியப் பெருளாதார வளர்ச்சி  மெதுவடையக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியத் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde)  எச்சரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மூப்படைந்து வரும் மக்களால் ஆசியப் பெருளாதார வளர்ச்சி மெதுவடையும்: பண நிதியத் தலைவர்

அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட். (படம்: Reuters)

மூப்படைந்து வரும் மக்களால் ஆசியப் பெருளாதார வளர்ச்சி  மெதுவடையக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியத் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde)  எச்சரித்துள்ளார்.

சோலில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.  

சீனா, கொரியா, தாய்லந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஒரு விழுக்காடு வரை குறைய கூடும் என்று தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கூறினார்.

உலகின் மிக பெரிய பொருளியலைக்கொண்ட சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வளர்ச்சி மெதுவடைந்தால் அது பிற நாடுகளையும் பாதிக்கும் என்றார் அவர்.

பெண்களை அதிக அளவில் ஊழியரணிக்கு ஈர்க்குமாறும், அதற்கு ஏதுவாக கூடுதல் குழந்தை பாரமரிப்பு சலுகைகளையும் பகுதி நேர வேலை செய்யும் அன்னையருக்கு அரசாங்கம் கூடுதல் ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் என்றும் லகார்ட் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்