Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்றிய 'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்குத் தண்டனை இல்லை

'யுனைட்டட் ஏர்லைன்ஸ்'  விமான நிறுவனம் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்றியதன் தொடர்பில் தண்டிக்கப்படாது என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்றிய 'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்குத் தண்டனை இல்லை

அவசர சறுக்குப் பலகை வழி வெளியேறிய பயணிகள். (படம்: Twitter)

'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்றியதன் தொடர்பில் தண்டிக்கப்படாது என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

விமானத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதால், பயணி ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அதன் தொடர்பில்,'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, அந்த சம்பவத்தின் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த அந்தச் சம்பவம் தொடர்பில் பயணி வழக்குத் தொடுத்திருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பயணியிடம் 'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' பேசி நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை முடித்துக் கொண்டது.

இந்நிலையில், பயணி விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் தொடர்பில், 'யுனைட்டட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பதற்கு அவசியம் ஏதுமில்லை என்று அமெரிக்கப் போக்குவரத்துத் துறை கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்