Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களைக் கண்டறிய சமூக ஊடகத்தின் உதவியை நாடும் மேற்கத்திய நாடுகள்

வெளிநாடுகளில் உள்ள பயங்கராவதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கப் பாரம்பரிய புலனாய்வு முறைகள் உதவுகின்றன. 

வாசிப்புநேரம் -
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களைக் கண்டறிய சமூக ஊடகத்தின் உதவியை நாடும் மேற்கத்திய நாடுகள்

(படம் : AFP)

நாட்டுக்குள் தனித்துச் செயல்படுவோர் மேற்கொள்ளும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துவருவதால் சமூக ஊடக நிறுவனங்களின் உதவி தேவை என மேற்கத்திய நாடுகள் கேட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் அந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

வெளிநாடுகளில் உள்ள பயங்கராவதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கப் பாரம்பரிய புலனாய்வு முறைகள் உதவுகின்றன. எனினும் உள்நாட்டில் செயல்படுவோரைக் கண்டுபிடிக்க அந்த முறைகள் போதாது என்று கூறப்பட்டது.

ஐசிஸ், அல்கயிதா போன்று வெளிநாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் திட்டங்களை முறியடிப்பதில் மட்டுமே பல நாடுகள் கவனம் செலுத்துவதாகப் பிரிட்டனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பேடி மேக்கின்னஸ் கூறினார். 

இணையத்தில் உள்ள பிரச்சாரங்களால் தீவிரவாதப் போக்கிற்கு மாறுவோரைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களின் உதவி இப்போது மிக அவசியமாகிறது என்று அவர் சொன்னார். 

சமூக ஊடகங்களில் நிலவும் மிரட்டல்களைக் கையாள புதிய முறை தேவை.

அதற்கு ஃபேஸ்புக், கூகள் போன்ற பெரியளவிலான ஊடக நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன் வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்