Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரொஹிஞ்சா மக்கள் யார்?

மியன்மாரில் பல தலைமுறைகளாக ரொஹிஞ்சா மக்கள் வாழ்கின்றனர்.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்கள் யார்?

(படம் : AFP)

உலகின் மிக ஒடுக்கப்பட்ட சமூகமாக ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர்.

ரக்கைன் மாநிலத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பலர் பங்களாதேஷுக்குத் தப்பி ஓடினர்.

ரொஹிஞ்சா மக்கள் யார்?

மியன்மாரில் பல தலைமுறைகளாக ரொஹிஞ்சா மக்கள் வாழ்கின்றனர்.

அவர்கள் மியன்மாரின் வடமேற்கு மாநிலமான ரக்கைனில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

பௌத்த சமயத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியன்மாரில் அவர்கள் குடிமக்களாகக் கருதப்படுவதில்லை.

அரசாங்கம் அவர்களை வங்காள மக்களாகக் கருதுகிறது. 

(படம் : AFP)

ஏன் பங்களாதேஷுக்குத் தப்பி ஓடுகின்றனர்?

ரக்கைன் மாநிலத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வன்முறை வெடித்தது.

ரொஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் பல்வேறு காவல் நிலைகளையும் இராணுவ முகாமையும் தாக்கினர். 

கலவரத்தில் குறைந்தபட்சம் 400 பேர் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து 146,000 கிராமவாசிகள் பங்களாதேஷுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

பங்களாதேஷ் அவர்களை அதிகாரபூர்வமாய் அகதிகளாகக் கருதுவதில்லை. 

எங்கே அவர்கள் தப்பித்து ஓடுகின்றனர்?

அவர்கள் பங்களாதேஷின் Cox's Bazar பகுதியில் உள்ள தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர்.

பலர் தங்களின் பயணத்தில் உயிரை இழக்கின்றனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்