Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கரிபியன் பகுதியை மோசமாக தாக்கிய இர்மா சூறாவளியால் 17 பேர் பலி

அமெரிக்காவின் கரிபியன் பகுதியை மோசமாக தாக்கிய இர்மா சூறாவளிக்குக், குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
கரிபியன் பகுதியை மோசமாக தாக்கிய இர்மா சூறாவளியால் 17 பேர் பலி

படம்: AFP

அமெரிக்காவின் கரிபியன் பகுதியை மோசமாக தாக்கிய இர்மா சூறாவளிக்குக், குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது, சூறாவளி அமெரிக்காவின் மற்ற பகுதிகளையும் தாக்கவுள்ளது என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆளுநர், ரிக் ஸ்காட், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, நேரம் குறைவாகவே இருக்கிறது என கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து, ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பலரும், நேற்று வீடுகளை விட்டு அவசரமாக வேளியேறினர். 

சுமார் 20 மில்லியன் பேர்களுக்கு, வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அனைவரும் வீடுகளை விட்டு, பாதுகாப்பான இடத்துக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என திரு ஸ்காட் கூறியுள்ளார்.

சுறாவளி இர்மா பின்னர் இன்று தாக்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்