Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதிய தடைகள் விதிக்கப்பட்டால், அமெரிக்கா அதற்கான விளைவுகளைச் சந்திக்கக்கூடும் - வடகொரியா மிரட்டல்

வட கொரியா மீதான புதிய தடை உத்தரவுகள் கொண்ட அமெரிக்காவின் நகல் தீர்மானம், இன்று ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வாசிப்புநேரம் -
புதிய தடைகள் விதிக்கப்பட்டால், அமெரிக்கா அதற்கான விளைவுகளைச் சந்திக்கக்கூடும் - வடகொரியா மிரட்டல்

(படம் : Kyodo News via AP)

வட கொரியா, அமெரிக்காவிற்கு மிக மோசமான வலியையும் வேதனையையும் அளிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வட கொரியாவின் ஆறாவது அணுவாயுத சோதனையை முன்னிட்டு, அதன் மீதான தடை உத்தரவுகளை அதிகரிக்க அமெரிக்கா வலியுறுத்தியது.

வட கொரியா மீதான புதிய தடை உத்தரவுகள் கொண்ட அமெரிக்காவின் நகல் தீர்மானம், இன்று ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வட கொரியா மீது எண்ணெய் இறக்குமதிக்கான தடை விதிக்கப் படுவதுடன், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் வெளிநாட்டு சொத்துகள் முடக்கப்படும்.

மேலும், வட கொரியாவிற்கான ஆடைகள் ஏற்றுமதியும், வட கொரிய ஊழியர்களுக்கான ஊதியமும் நிறுத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்கா முன் மொழிந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்