Images
  • 10 Media Censorship
    (படம்: AFP/NICOLAS ASFOURI)

உலகில் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட 10 நாடுகள்

உலகில் ஆகக் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு எரித்ரியா. வடகொரியா, சீனா, சவுதி அரேபியா உட்பட மேலும் ஒன்பது நாடுகளிலும் ஊடகங்களுக்கு அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஊடகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரித்ரியா, வடகொரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகங்கள் அரசாங்கத்தின் ஊதுகுழலாகவே செயல்படுகின்றன. அந்த நாடுகளுக்கு வெளியே இருந்துதான் சுதந்திரமாக ஏதேனும் சொல்லமுடியும் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு கூறியது.

சவுதி அரேபியா, சீனா, வியட்நாம், ஈரான் ஆகிய நாடுகளில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இணையம், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அந்த நாடுகளில் செய்தியாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், வானொலி அலைகளைத் தடுக்கும் நவீனச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார். அதன் மூலம் மக்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது கட்டுப்படுத்தப்படும்.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடைய நிர்வாகத்தின்கீழ் செய்தியாளர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாவதாகச் செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

சீனாவில் நவீன கண்காணிப்புச் சாதனம் நடப்பில் உள்ளது. அங்குள்ள அதிகாரிகள் உள்நாட்டிலுள்ள இணையப் பயன்பாட்டாளர்களையும், அனைத்துலகச் செய்தியாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  

Top