Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: உலகளவில் 10 மில்லியனை எட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

COVID-19 நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை நெருங்குகிறது.

வாசிப்புநேரம் -
COVID-19: உலகளவில் 10 மில்லியனை எட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

(படம்: REUTERS/Akhtar Soomro)

COVID-19 நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை நெருங்குகிறது.

6 மாதத்திற்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்றுக்கு சுமார் அரை மில்லியன் பேர் பலியாகிவிட்டனர்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி

பாதிக்கப்பட்டவர்களில்....

  • வட அமெரிக்கா - 25%
  • லத்தீன் அமெரிக்கா - 25%
  • ஐரோப்பிய நாடுகள் - 25%
  • ஆசியா - 11%.
  • மத்திய கிழக்கு நாடுகள் - 9%
  • உலகின் எஞ்சிய பகுதிகள் - 5%


சீனாவின் வூஹான் நகரில் தொடங்கியதாக நம்பப்படும் கொரோனா கிருமித்தொற்று தற்போது உலகின் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.

இந்தியா, பிரேசில், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உலக நாடுகள் நோய்ப்பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தளர்த்திவருகின்றன.

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு தடுப்பூசி தான், ஆனால் அதைக் கண்டுபிடிக்க சுமார் ஓராண்டு காலம் பிடிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்