Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வடகொரியாவுக்குச் சொந்தமான யூட்டியூப் ஒளிவழிக்குத் தடை

யூட்டியூப் நிறுவனம், வடகொரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான அதன் ஒளிவழி ஒன்றைத் தடை செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

யூட்டியூப் நிறுவனம், வடகொரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான அதன் ஒளிவழி ஒன்றைத் தடை செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரசாரத்திற்காக அந்த ஒளிவழி செயல்பட்டு வந்தது.

உரிமின்ஸொக்கிரி என்ற அந்த ஒளிவழி, வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைக் காட்சிகளைக் காட்டும் காணொளிகளை அடிக்கடி பதிவேற்றம் செய்துவந்தது.
அந்நாட்டின் தலைவர் கிம் ஜோம் உன்னைப் பாராட்டும் காணொளிகளும் ஒளிவழியில் இடம்பெற்றன.

அந்த ஒளிவழி மூடப்பட்டது குறித்து யூட்டியூப் காரணம் ஏதும் தெரிவிக்கவில்லை.

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளைக் கண்டித்து அமெரிக்கா வர்த்தகத் தடைகள் பலவற்றை விதித்திருக்கிறது. ஒளிவழியில் இடம்பெறும் விளம்பரங்களால் யூட்டியூப்பிற்குச் சேரும் வசூல், அந்த வர்த்தகத் தடைகளை மீறியிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்