Images
  • sushi

ஒரே இரவில் 100 தட்டு உணவைச் சாப்பிட்ட வாடிக்கையாளர்

ஜெர்மானிய விளையாட்டு வீரர் ஒருவர் ஒரே இரவில் 100 தட்டு உணவைச் சாப்பிட்டு உணவகத்தில் வேலை செய்யும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஜெர்மனியில் உள்ள All-you-can-eat எனும் சுஷி உணவகத்தில் அந்த ஆச்சர்யம்.

வீரரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவகத்தின் உரிமையாளர் அந்த வீரரை இனி கடைக்குள் வரவிடக்கூடாது என்று தடை விதித்துள்ளார்.

100 தட்டு உணவை உண்ட அந்த வீரர் உணவகத்திற்குச் செலுத்திய கட்டணம் 25 வெள்ளி மட்டுமே.

ஐந்து பேர் உண்ண வேண்டிய உணவை ஒருவர் மட்டுமே சாப்பிட்டதற்குத் தான் அந்த வீரர் தடைசெய்யப்பட்டதாக உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.

தாம் தடைசெய்யப்பட்டது வியப்பாக இருக்கிறது என்று விளையாட்டு வீரர் தெரிவித்துள்ளார். 

Top