Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

10 நிமிடத்தில் அமெரிக்க இணையத்தளத்தை ஊடுருவிய 11 வயதுச் சிறுவன்

3 நாள் மாநாட்டில் 6 முதல் 17 வயது வரையிலான 35 பிள்ளைகள் கலந்துகொண்டனர்.

வாசிப்புநேரம் -
10 நிமிடத்தில் அமெரிக்க இணையத்தளத்தை ஊடுருவிய 11 வயதுச் சிறுவன்

(படம்:REUTERS/Steve Marcus)

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 11 வயதுச் சிறுவன் 10 நிமிடத்துக்குள் முக்கியமான இணையத்தளம் ஒன்றை ஊடுருவியுள்ளான்.

தேர்தல் முடிவுகளை வெளியிடும் இணையத்தளத்தைப் போலவே இருந்த இன்னொரு தளத்தை ஊடுருவி, அதிலிருந்த தகவல்களை அவன் மாற்றியுள்ளான்.

இணைய ஊடுருவல் தொடர்பான மாநாட்டில் அது நடந்தது.

நாடுதழுவிய வாக்களிப்பின் தொடர்பில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விகளை அது தூண்டியுள்ளது.

3 நாள் மாநாட்டில் 6 முதல் 17 வயது வரையிலான 35 பிள்ளைகள் கலந்துகொண்டனர்.

அதிக இழுபறி நிலவும் வாய்ப்புள்ள 6 மாநிலங்களின் இணையத்தள மாதிரிகளை அவர்கள் ஊடுருவினர்.

அமெரிக்கத் தேர்தல் கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சங்களைச் சோதிக்கும் நோக்கத்தோடு மாநாடு நடைபெற்றது.

குறைபாடுகள் குறித்த தகவல்கள் அந்தந்த மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்