Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரக்கைன் கலவரம் - மியன்மார் மீது பங்களாதேஷ் குற்றச்சாட்டு

ரக்கைனில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான சண்டை நீடிக்கிறது. சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கடுமையான அல்லலுக்கு ஆளாகியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
ரக்கைன் கலவரம் - மியன்மார் மீது பங்களாதேஷ் குற்றச்சாட்டு

(படம்:AFP/Munir Uz Zaman)

மியன்மார் அரசாங்கம் ரக்கைன் மாநிலத்தில் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் A.H. மஹ்மூட் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரக்கைனில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான சண்டை நீடிக்கிறது. சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கடுமையான அல்லலுக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களில் ஆயிரக்கணக்கனோர் பாதுகாப்புத் தேடி பங்களாதேஷூக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு கடந்த இரண்டு வாரங்களில் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் சுமார் 300 ஆயிரம் பேர் அங்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இதுவரை பங்களாதேஷ் சென்றுள்ள அகதிகளின் எண்ணிக்கை 700 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ரக்கைனில் இனப்படுகொலை நடந்து வருவதாக அனைத்துலகச் சமூகம் கருதுகிறது. அதையே தாமும் உறுதிப்படுத்துவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரக்கைனில் வன்முறையைத் தடுத்து நிறுத்த மியன்மார் அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்