Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

1.3 கிலோகிராம் கொகெய்னை விழுங்கிய பிரேசில் இளையர் தாய்லந்து விமான நிலையத்தில் கைது

விமான அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பௌலொ கைது செய்யப்பட்டார். 

வாசிப்புநேரம் -
1.3 கிலோகிராம் கொகெய்னை விழுங்கிய பிரேசில் இளையர் தாய்லந்து விமான நிலையத்தில் கைது

(படம்:Narcotics Suppression Bureau )

1.3 கிலோகிராம் எடையுள்ள 100 கொய்கெய்ன் (Cocaine) மாத்திரைகளை விழுங்கி வயிற்றுக்குள் வைத்துக் கடத்த முயற்சி செய்த பிரேசில் ஆடவரைத் தாய்லந்து அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சுவர்னபூமி விமான நிலையத்தில் 17 வயது ஆடவர் பிடிப்பட்டார்.

பௌலொ நசிமென்டொவின் (Paulo Nascimento) வயிற்றில் மாத்திரைகள் இருந்தது (Paulo Nascimento) ஊடுகதிர்ச் சோதனை மூலம் தெரியவந்தது.

(படம்:Narcotics Suppression Bureau )

விமான அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பௌலொ கைது செய்யப்பட்டார்.

பிரேசிலில் இருந்து எத்தொபியன் ஏர்லையின்ஸ் விமானத்தில் அவர் பேங்காக் சென்றடைந்தார். அங்கு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகளுடன் பௌலொ ஒத்துழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் மாத்திரைகளைப் பெளலோ வேறொருடவரிடம் கைமாற்றிவிட இருந்ததாகத் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, எல்சொனியஸ் டா சில்வா (Elsonias Da Silva) எனும் 35 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்