Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அருமருந்தாகும் தேன்

உணவிற்குச் சுவை சேர்ப்பதோடு நிற்கவில்லை தேனின் பலன்கள். அதனால் நம் உடலுக்கும் பல நன்மைகள் உண்டு.

வாசிப்புநேரம் -

உணவிற்குச் சுவை சேர்ப்பதோடு நிற்கவில்லை தேனின் பலன்கள். அதனால் நம் உடலுக்கும் பல நன்மைகள் உண்டு.

1. இருமலைக் கட்டுப்படுத்துவது

தொண்டையில் ஏற்படும் எரிச்சல், வீக்கத்தைத் தணிக்க தேன் உதவுகிறது. இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு இரண்டு தேக்கரண்டி தேனை அருந்துவது இருமலைக் கட்டுப்படுத்த உதவும்.

2. சருமத்தின் ஈரப்பதத்தைக் காப்பது

தேனில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் நீரைத் தேக்கி வைக்கும் ஆற்றல் உடையவை.

இதனால் சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படும்.

3. பருக்களுக்குத் தீர்வு

கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையது தேன். பரு வீக்கமுள்ள பகுதியில் சிறிதளவு தேனை உபயோகிப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும்.

4. தொண்டை வலிக்கு நிவாரணம்

தேனுக்குக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளதால், தொண்டை வலியால் அவதியுறுவோருக்கும் உதவக்கூடும். அரைக் குவளைத் தண்ணீர், 1 தேக்கரண்டி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, 1 தேக்கரண்டி தேன். இவை அனைத்தையும் சேர்த்துக் கொப்பளிப்பது தொண்டை வலிக்குத் தீர்வு காண உதவும்.

5. பொடுகுப் பிரச்சினைக்குத் தீர்வு

பூஞ்சை பிடிப்பதைத் தடுக்கம் தன்மை தேனுக்கு உண்டு. உச்சந்தலையின் ஈரப்பதம் குறையாமலிருக்க அது உதவுகிறது. தேனைத் தலைக்குப் பயன்படுத்திக் கழுவுவதால் பொடுகுப் பிரச்சினை குறையக் கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்