Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வட கொரியாவுக்கு எதிரான பொருளியல் தடைகள் தொடரவேண்டும்: ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்

வட கொரியாவுக்கு எதிரான பொருளியல் தடைகள் தொடரவேண்டும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

வட கொரியாவுக்கு எதிரான பொருளியல் தடைகள் தொடரவேண்டும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ வலியுறுத்தியுள்ளார். சேனல் நியூஸ்ஏஷியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.

தென் கொரியாவில், பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே, வட கொரியா பல்வேறு அரசதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், திரு. கோனோவின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

சீனாவுடனான தமது நாட்டின் உறவு சீராய் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சீனா, தென் கொரியா ஆகியவற்றுடனான முத்தரப்பு உச்சநிலைக் கூட்டத்தை இவ்வாண்டு நடத்த ஜப்பான் தயாராய் இருப்பதாகத் திரு கோனோ கூறினார்.

ஆயினும், தென் சீனக் கடல் பிரதேசப் பூசல்கள் குறித்தும் செங்காக்கு தீவு மீதான உரிமை குறித்தும் சீனாவுக்கும் தமது நாட்டுக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு கோனோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்