Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போதையில் சொந்தக் கண்களைத் தோண்டி எடுத்த பெண்மணி

போதைப் புழங்கியாக இருப்பதைவிடப் பார்வையற்ற பெண்ணாக இருப்பது எவ்வளவோ மேல் என்கிறார் அவர். 

வாசிப்புநேரம் -
போதையில் சொந்தக் கண்களைத் தோண்டி எடுத்த பெண்மணி

(படம்:Pixabay)

அமெரிக்கா: சவுத் கெரலைனா மாநிலத்தில் 20 வயதுப் பெண்மணி ஒருவர் போதையில் இருந்தபோது தனது கண்களைத் தானே தோண்டி எடுத்துள்ளார்.

கடவுளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தனது கண்களைத் தாமே பறித்துக் கொண்டார்.

19 வயதில் தொடங்கியது அவரது போதைப் பழக்கம்.

பள்ளியில் பிரச்சினைகளைச் சமாளிக்க அவர் போதைப் பொருள் புழக்கத்திற்குத் திரும்பினார்.

நாளடைவில் அவரது போதைப் பழக்கம் அதிகரித்தது.

போதையில் இருக்கும் போது கடவுளுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வு கிடைத்தாகக் கூறினார் பெண்மணி.

அது போன்ற ஒரு தருணத்தில்தான் தனது கண்களைப் பறித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

தேவாலயத்தின் வாசலில் தனது கண்களைப் பறித்துக் கொண்டார் பெண்.

பெண்ணின் கதறலைக் கேட்டு உதவிக்கு வந்தனர் தேவாலயத்தில் உள்ளவர்கள்.

போதையின் கடுமையால் கண்களைப் பிடுங்கும்போது உருவான வலி மரத்துப் போனதாகக் கூறினார் அவர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்மணி தனது பார்வையை முற்றாக இழந்து விட்டார்.

மனோவியல் பிரச்சனைகளுக்குச் சிகிச்சையும் பெற்றுள்ளார் அவர்.

போதைப் புழங்கியாக இருப்பதைவிடப் பார்வையற்ற பெண்ணாக இருப்பது எவ்வளவோ மேல் என்கிறார் அவர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்