Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தோல்விகளைக் கொண்டாடும் காட்சியகம்

தோல்வியில் முடிந்த படைப்புகளைச் சேகரித்து அவற்றைக் காட்சிக்கு வைக்கிறது லாஸ் ஏஞ்சலிசின் தோல்விக்கான காட்சியகம்.

வாசிப்புநேரம் -
தோல்விகளைக் கொண்டாடும் காட்சியகம்

(படம்: Reuters)

தோல்வியில் முடிந்த படைப்புகளைச் சேகரித்து அவற்றைக் காட்சிக்கு வைக்கிறது லாஸ் ஏஞ்சலிசின் தோல்விக்கான காட்சியகம். சுவீடனில் முதன்முதலாக நிறுவப்பட்ட காட்சியகம், இப்போது லாஸ் ஏஞ்சலிசில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்.

'கால்கேட்' நிறுவனம் உருவாக்கிய உணவுப்பொருள், கூகுள் கண்ணாடி, டிரம்ப்பின் பெயரில் உருவாக்கப்பட்ட 'மோனோப்போலி' விளையாட்டு...இப்படி பல படைப்புகள் மக்களிடையே வரவேற்புப் பெறாமல் முடங்கிப் போயுள்ளன.

ஆயினும், அத்தகைய தோல்விகள், வெற்றிகரமான புத்தாக்கத்திற்கான ஏணிப்படிகள். அதனை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும் என்ற ஆசையில் காட்சியகத்தை நிறுவியதாக அதன் காப்பாளர் சாமுவல் வெஸ்ட் தெரிவித்தார்.

மனோவியல் வல்லுநரான வெஸ்ட், தோல்வி பற்றிய பயத்தைத் தமது காட்சியகம் குறைத்துவருவதைக் கண்டு அகமகிழ்வதாகக் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்