Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புதிய பங்காளித்துவ ஒப்பந்தத்தில் சாங்கி விமான நிலையக் குழுமம், குவாண்டாஸ்

சாங்கி விமான நிலையக் குழுமம் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், ஆஸ்திரேலியாவின்  குவாண்டாஸ் ஆகியவை புதிய பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
புதிய பங்காளித்துவ ஒப்பந்தத்தில் சாங்கி விமான நிலையக் குழுமம், குவாண்டாஸ்

(படம்: James Morgan)

சாங்கி விமான நிலையக் குழுமம் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஆகியவை புதிய பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதிகமான வருகையாளர்களைச் சிங்கப்பூருக்கு ஈர்ப்பது அந்த ஐந்து மில்லியன் வெள்ளி ஒப்பந்தத்தின் நோக்கம்.

வெளிநாட்டு விமான நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்படுவது இது முதல்முறை என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
சிங்கப்பூரை ஒரு பயணத் தலமாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகியவற்றை இணைக்கும் நுழைவாயிலாகவும் பிரபலப்படுத்துவது புதிய உடன்பாட்டின் நோக்கம்.

மூன்று தரப்புகளும் இணைந்து வர்த்தக விளம்பர இயக்கங்களை ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென் கிழக்காசியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளும். சிங்கப்பூர் வழியாக குவாண்டாஸ் சேவைகளைப் பயன்படுத்த அந்த விளம்பர இயக்கங்கள் ஊக்குவிக்கும். ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவற்றில் உள்ள முக்கியச் சந்தைகளில் இருந்து சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அதன் நோக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்