Images
  • Rohingya (1)
    தொடர்ந்து தவிக்கும் ரொஹிஞ்சா அகதிகள். (படம்: Reuters)

ரொஹிஞ்சாக்கள் மீது வெறுப்பை விதைக்க ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் மியன்மார் - ஐ.நா.

மியன்மாரின் தேசியவாத பௌத்தப் பிக்குகளும் அரசாங்கமும், ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் கருத்துகளைப் பரப்ப, ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில், ஐக்கிய நாட்டு நிறுவனச் சிறப்பு அதிகாரி யாங்ஹீ லீ அந்தக் குற்றச்சாட்டை விடுத்தார்.

கடந்த ஜனவரி மாதம், மியன்மாரின் கடும்போக்குடைய தேசியவாத பௌத்த பிக்குகளில் ஒருவரான விராத்துவின் ஃபேஸ்புக் கணக்கை, ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கியது. அவர் வெறுப்பைத் தூண்டும் உரைகளைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வந்ததாக அதற்குக் காரணம் கூறப்பட்டது.

முழுமையான இராணுவ ஆட்சி 2011ஆம் ஆண்டு அகற்றப்பட்டதுமுதல், தேசியவாதப் பிக்குகள், மியன்மாரின் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்தனர். சிறுபான்மை ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அப்பட்டமான இன அழிப்பின் அடையாளத்தைக் கொண்டிருப்பதாகவும் திருமதி லீ தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Top