Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூரில் தளங்கொண்டுள்ள நிறுவனத்தின் கையகப்படுத்தும் நடவடிக்கையைத் தடுத்த டிரம்ப்

சிங்கப்பூரில் தளங்கொண்டுள்ள Broadcom தொழில்நுட்ப நிறுவனம், Qualcomm நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தடுத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தளங்கொண்டுள்ள நிறுவனத்தின் கையகப்படுத்தும் நடவடிக்கையைத் தடுத்த டிரம்ப்

Broadcom தொழில்நுட்ப நிறுவனத்தின் சின்னம். (படம்: Reuters)

சிங்கப்பூரில் தளங்கொண்டுள்ள Broadcom தொழில்நுட்ப நிறுவனம், Qualcomm நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தடுத்திருக்கிறார்.

தேசியப் பாதுகாப்பின் காரணமாக அந்த முடிவு எடுக்கப்படதாகத் தகவல்கள் வெளிவந்தன.

சான் டியேகோவில் தளம் கொண்டுள்ளது Qualcomm நிறுவனம். Broadcom நிறுவனத்துடன் அது இணைந்தால் தொழில்நுட்பத் துறையில் Qualcomm-இன் ஆதிக்கம் குறையும் என அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டைக் கண்காணிக்கும் குழு குறிப்பிட்டது. அதனால் சீனாவைச் சேர்ந்த Huawei போன்ற போட்டி நிறுவனங்கள் வலுபெறலாம் என்றும் அந்தக் குழு கூறியது.

Qualcomm நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் பாதுகாப்பு அக்கறைகள் எழலாம் என்ற கருத்தை நிராகரிப்பதாக Broadcom கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்