Images
  • Trump (2)
    (படம்: Reuters)

துப்பாக்கிக் கட்டுப்பாடுகள்: சொன்ன சொல்லிலிருந்து பின்வாங்குகிறாரா டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், துப்பாக்கிப் பயன்பாட்டுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் எண்ணத்தை, துப்பாக்கி உரிமை ஆர்வலர்களுக்காக மாற்றிக்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் திரு டிரம்ப் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால், துப்பாக்கிகளின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கியதாகக் கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

(தொடர்புடையது -  'துப்பாக்கி இல்லையென்றாலும் சம்பவ இடத்துக்கு விரைந்திருப்பேன்!' )

ஆற்றல்மிக்க ஆயுதங்களை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 இலிருந்து 21க்கு உயர்த்தும் திட்டத்திற்குத் திரு. டிரம்ப் முன்னர் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அந்தத் திட்டத்தை இப்போது தாம் செயல்படுத்தப்போவதில்லை என்று திரு. டிரம்ப், தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Donald J. Trump on Twitter

On 18 to 21 Age Limits, watching court cases and rulings before acting. States are making this decision. Things are moving rapidly on this, but not much political support (to put it mildly).

நீதிமன்றத் தீர்ப்புகளைக் கண்காணிப்பதாகக் கூறும் அவர், குறைந்தபட்ச வயது குறித்து மாநில அரசாங்கங்கள் தற்போது முடிவெடுத்து வருவதாக அவர் கூறினார். மேலும், தமக்குத் தேவையான அரசியல் ஆதரவு இந்த விவகாரத்தில் இல்லை என்று திரு. டிரம்ப் சொன்னார்.

திரு டிரம்ப் பதவியேற்ற முதலாம் ஆண்டில் இதுவரை மூன்று பெரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. திரு. டிரம்ப் அமெரிக்காவின் தேசியத் துப்பாக்கி அமைப்புக்கு விட்டுக்கொடுத்திருப்பதாக அவரது அரசியல் எதிரிகள் குறைகூறி வருகின்றனர்.

உங்கள் கருத்து

Top