Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வடகொரியத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு டிரம்ப்பிற்குக் கிடைக்கும் - வெள்ளை மாளிகை நம்பிக்கை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னைச் சந்திக்கும் வாய்ப்பு குறித்து, வாஷிங்டன் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வடகொரியத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு டிரம்ப்பிற்குக் கிடைக்கும் - வெள்ளை மாளிகை நம்பிக்கை

(படம்: AFP)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னைச் சந்திக்கும் வாய்ப்பு குறித்து, வாஷிங்டன் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் H.R. McMaster அவ்வாறு கூறினார்.

இருப்பினும், பியோங்யாங் அணுவாயுதங்களைக் கைவிடுவதற்குத் தொடர்ந்து நெருக்குதல் அளிப்பதில் அமெரிக்கா உறுதியாய் இருப்பதாகச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சென்ற வாரம் எதிர்பாரா விதமாகத் திரு. டிரம்ப்பும், மே மாத இறுதியில் திரு. கிம்மைச் சந்திக்க இணக்கம் தெரிவித்தார். அத்தகைய சந்திப்புக்கான சாத்தியம் குறித்து வடகொரியா இதுவரை வெளிப்படையாகக் கருத்துரைக்கவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்