Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குட்டிக்கரணம் அடித்து ஆடவரைக் காலில் சுட்ட FBI அதிகாரி (காணொளி)

பணியில் இல்லாத போது இரவுக் கேளிக்கை விடுதியில் நடனமாடிய FBI அதிகாரி தவறுதலாக ஆடவர் ஒருவரைத் தமது துப்பாக்கியால் சுட்டார். அதிகாரிமீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பணியில் இல்லாத போது இரவுக் கேளிக்கை விடுதியில் நடனமாடிய FBI அதிகாரி தவறுதலாக ஆடவர் ஒருவரைத் தமது துப்பாக்கியால் சுட்டார். அதிகாரிமீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சேஸ் பிஷப் என்ற 29-வயது அதிகாரி ஆடும் போது குட்டிக்கரணம் அடிக்க முயன்றார். அப்போது அவரது கால்சட்டைப் பையிலிருந்து விழுந்த துப்பாக்கி அருகில் இருந்த ஆடவர் ஒருவரின் காலைச் சுட்டது.

தாமாகவே காவல்துறைக்குச் சென்று தவற்றை ஒப்புக்கொண்டார் பிஷப். அவரது இரத்தத்தில் உள்ள மதுபான அளவைப் பொறுத்து அவர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று டென்வர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்வத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. துப்பாக்கி தரையில் விழ, பிஷப் அதைப் பிடிக்கச் செல்லும் போது அது சுடும் காட்சி காணொளியில் பதிவாகியது.

காலில் சூடுபட்ட ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்