Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனித உரிமை ஆணைய வருடாந்திர வரவுசெலவுக்கு 20 டாலர் போதும் - ஃபிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம்

கடந்த 15 மாதங்களில் அந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்துப் புலனாய்வு செய்யும் ஆணையத்தின் முயற்சிகளுக்குப் பதிலடி அது என்று கருதப்படுகிறது.

வாசிப்புநேரம் -
மனித உரிமை ஆணைய வருடாந்திர வரவுசெலவுக்கு 20 டாலர் போதும் - ஃபிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம்

(படம் :REUTERS/Pool/Mark Cristino)

பிலிப்பீன்சில் அதிபர் ரொட்ரிகோ டுடார்ட்டேவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆணையத்திற்கு வருடத்திற்கு 20 டாலர் மட்டுமே நிதி ஒதுக்க வாக்களித்துள்ளனர்.

அந்த ஆணையம் ஒரு அரசாங்க அமைப்பு.

அதிபர் டுட்டார்ட்டேயின் போதைப் பொருளுக்கு எதிரான போரில் அதிபருக்கும் அந்த ஆணையத்துக்கும் பலமுறை மோதல் ஏற்பட்டது.

கடந்த 15 மாதங்களில் அந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்துப் புலனாய்வு செய்யும் ஆணையத்தின் முயற்சிகளுக்குப் பதிலடி அது என்று கருதப்படுகிறது.

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையைக் குறைகூறுவோர் அவ்வாறு தெரிவித்தனர்.

அந்த ஆணையம் மிகவும் அவசியமான ஒன்று எனவும் முறையான நிதி ஒதுக்கீடு இல்லாமல் அது செயல்பட முடியாது என்றும் மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மற்றொரு வாக்கெடுப்பு, செனட் அங்கீகாரம் ஆகியவற்றுக்குப் பிறகே இறுதி நிதி ஒதுக்கீடு பற்றி முடிவுசெய்யப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்