Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அமெரிக்காவுடனான உறவு இதற்குமேலும் மோசமடைய வாய்ப்பில்லை - ரஷ்யா

அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சரின் நியமனத்தால் அந்நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு தற்போது இருப்பதை விட மோசமாகிவிட முடியாது என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடனான உறவு இதற்குமேலும் மோசமடைய வாய்ப்பில்லை - ரஷ்யா

ரஷ்ய அதிபர் மாளிகை. (படம்: Reuters)

அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சரின் நியமனத்தால் அந்நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு தற்போது இருப்பதை விட மோசமாகிவிட முடியாது என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

அடிமட்டத்திற்கும் கீழே விழுவது சாத்தியமல்ல என்பதால், நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு குறைவே என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் தெரிவித்தார். என்றாலும், இரு நாட்டு உறவில் ஆக்கபூர்வமான, தெளிவான அணுகுமுறை தொடரும் என்று நம்புவதாகத் திரு பெஸ்கொவ் கூறினார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்க அமெரிக்க அரசாங்கம் அதிகம் செய்யவேண்டும் என்று, பணி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தமது பிரிவுபசார உரையில் குறிப்பிட்டிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்