Images
  • xi jinping (1)
    (படம்:  AFP)

சீனா: அதிபர் சீயைப் போற்றும் புதிய திரைப்படம்

சீன அதிபர் சீ சின்பிங்கைப் பற்றிய திரைப்படம் ஒன்று அந்நாட்டுத் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. 64 வயது திரு. சீயையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் போற்றிப் புகழ்கிறது அந்தப் படம்.

'அற்புத சீனா' என்ற பொருளைக் கொண்ட தலைப்பில் அந்தப் படம் இம்மாதம் 2ஆம் தேதி திரையேறத் தொடங்கியது.

சீனாவிலுள்ள அரசாங்க அலுவலகங்களையும் நிறுவனங்களையும் சேர்ந்த ஊழியர்கள் திரளாகச் சென்று படத்தைப் பார்த்ததால் படம் பெரும் வெற்றியை அடைந்ததாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

'அற்புத சீனா', ஆக அதிகமாகப் பார்க்கப்படும் ஆவணப்படமாக விளங்குவதை அரசாங்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

திரு. சீ நிரந்தர அதிபராக இருக்க வழிசெய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கிடையே அவரது மதிப்பை உயர்த்த பல உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

உங்கள் கருத்து

Top