Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் அதிபர் ஹலிமா

பீஷானில் உள்ள SMRT ரயில் பராமரிப்பு நிலையத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று பார்வையிட்டார்.

வாசிப்புநேரம் -

பீஷானில் உள்ள SMRT ரயில் பராமரிப்பு நிலையத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று பார்வையிட்டார். சிங்கப்பூர்ப் பொதுப் போக்குவரத்து முறையை சுமார் 21 000 ஊழியர்கள் கையாண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பாராட்டுவதற்காக அதிபர் அங்கு சென்றிருந்தார்.

பராமரிப்பு நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்து அதிபர் ஹலிமாவிடம் விவரிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து சிங்கப்பூரின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. அது சிங்கப்பூரர்களை பொருளியல் ரீதியாக மட்டும் ஒருங்கிணைக்கவில்லை.

மாறாக, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கியப் பங்காற்றுவதாகத் திருவாட்டி ஹலிமா கூறினார். ரயில் சேவையை மேம்படுத்தக் கூடுதல் நேரம் ஒதுக்கி ஊழியர்கள் கடினமாக உழைத்து வருவதை அவர் சுட்டினார்.

ஊழியர்கள் திடமான மனவுறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுவதாக அதிபர் சொன்னார். ஊழியர்களில் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் துறையில் பணிபுரிந்துள்ளனர்.

சிங்கப்பூர்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்துவதில் தாங்களும் பங்களித்திருப்பதாக அவர்கள் உணர்கின்றனர் என்று திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்