Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிய சுவையான தகவல்கள்

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞரும், இயற்பியல் நிபுணருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.

வாசிப்புநேரம் -
ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிய சுவையான தகவல்கள்

ஸ்டீஃபன் ஹாக்கிங். (படம்: AFP)

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞரும், இயற்பியல் நிபுணருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.

1. Relativity எனப்படும் விண்வெளி, நேரம், புவியீர்ப்பு, பிரபஞ்சம் தொடர்பான ஆய்வில் ஹாக்கிங் முத்திரை பதித்தவர்.

2. விண்வெளியில் உள்ள Black Holes எனும் கருப்புத் துளைகள் பற்றி முன்பு கண்டுபிடிக்கப்படாத தகவல்களையும் திரட்டிய பெருமை அவரைச் சேரும்.

3. "A Brief History of Time" உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் நூல்களை எழுதி வெளியிட்டவர்.

4. தமது 22ஆம் வயதில் அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஹாக்கிங், சில ஆண்டுகளே உயிர்வாழ முடியும் என மருத்துவர்கள் கூறினர். அந்த நோயின் காரணமாக அவரால் சுயமாக நடமாட இயலவில்லை.பேச்சுத் திறனும் குன்றியது. எனினும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, பேசுவதற்கு Voice Synthesizer எனும் கருவியை ஹாக்கிங் பயன்படுத்தினார்.

5. ஹாக்கிங், சிறந்த சிந்தனைகளையும் எழுத்துக்களின் வழி உலகிற்கு விட்டுச் சென்றிருக்கிறார். பல மில்லியன் ஆண்டுகளாக மாக்களைப் போல் வாழ்ந்து வந்த மனிதர்களுக்குச் சாதிக்கக் கைகொடுத்தது பேச்சுத்திறன் என அவர் கூறினார். பேசுவது மட்டுமின்றி கேட்கவும் மனிதர்கள் கற்றுக்கொண்டதால் சாதனைகள் உருவானதாக ஹாக்கிங் கூறினார். பேசாததால் மனிதர்கள் தோல்வியடைந்ததாகவும் அவர் சொன்னார். தொழில்நுட்பம் நமக்குத் தரும் சாத்தியங்கள் ஏராளம். நாம் தொடர்ந்து செய்யவேண்டியது பேசுவது மட்டுமே என்று ஹாக்கிங் சொல்கிறார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தமது வீட்டில் அவர் காலமானார். தமது தந்தையின் மரணம் ஆழ்ந்த வருத்தம் அளித்தாலும், அவரது மாபெரும் அறிவியல் சாதனைகள் பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் என்று ஹாக்கிங்கின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்