Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இர்மா சூறாவளியால் மின்சாரத் துண்டிப்பு - 8 முதியவர்கள் மரணம்

வயதானவர்களின் மரணம் குறித்து மனம் உடைந்துபோனதாக மாநில ஆளுநர் ரிக் ஸ்காட் தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -
இர்மா சூறாவளியால் மின்சாரத் துண்டிப்பு - 8 முதியவர்கள் மரணம்

(படம்:The New York Times)


மயாமி: புளோரிடாவிலுள்ள தாதிமை இல்லத்தில் இர்மா சூறாவளியால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து 8 பேர் மாண்டனர்.

தாதிமை இல்ல மரணங்களுடன் சேர்த்து புளோரிடாவில் இர்மா சூறாவளியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

மயாமியின் வடக்குப் பகுதியிலுள்ள தாதிமை இல்லத்திலிருந்து சுமார் 115 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

வயதானவர்களின் மரணம் குறித்து மனம் உடைந்துபோனதாக மாநில ஆளுநர் ரிக் ஸ்காட் தெரிவித்தார்.

புளோரிடாவைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இர்மா சூறாவளி தாக்கி வந்ததைத் தொடர்ந்து 6 மில்லியன் பேருக்கு மேல் வீட்டைவிட்டு வெளியேறவேண்டிருந்தது.

அமெரிக்க வரலாற்றின் ஆகப் பெரிய வெளியேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்