Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பதவியேற்ற முதல் நாளில்...ஃபிரான்ஸ் புதிய அதிபர்

ஃபிரான்ஸ் புதிய அதிபர் இமானுவல் மெக்ரோன், தமது பதவி காலத்தின் முதன் நாளன்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பதவியேற்ற முதல் நாளில்...ஃபிரான்ஸ் புதிய அதிபர்

ஃபிரான்ஸ் அதிபராகப் பதவியேற்றுள்ள இமானுவல் மேக்ரோன். (படம்: REUTERS/Gonzalo Fuentes)

ஃபிரான்ஸ் புதிய அதிபர் இமானுவல் மெக்ரோன், தமது பதவி காலத்தின் முதன் நாளன்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார்.

அண்மை பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடர்பில் பாரிஸ்வாசிகள் நடந்துகொண்ட விதத்தை அவர் பாராட்டினார்.

2024-ஆம் ஆண்டில் பாரிஸில் ஒலிம்பிக் விளையாட்டுளை நடத்துவதற்கான முயற்சிகளுக்குத் தாம் முழு ஆதரவளிக்கவிருப்பதாகத் திரு மேக்ரோன் சொன்னார்.

ஃபிரான்ஸில் அவர் ஏற்படுத்தவிருக்கும் நம்பிக்கை அலைகளுக்கு அந்தத் திட்டங்கள் பெரிதும் கைகொடுக்கும் எனத் திடமான நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

இன்று பின்னேரத்தில் ஃபிரான்ஸின் புதியப் பிரதமர் குறித்த விவரங்களைத் திரு மேக்ரோன் வெளியிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பெர்லின் சென்று ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கலை அவர் சந்திப்பார்.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது குறித்து மேலும் ஒத்துழைப்பு வழங்க உதவும்படி திரு மேக்ரோன் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்