Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"இணையத் தாக்குதல்களுக்கு இடையே விழிப்புடன் செயல்படவும்" - மைக்ரோசாஃப்ட்

உலக அளவில் நடந்த இணையத் தாக்குதல்களை அரசாங்கங்களும் அமைப்புகளும் மேலும் விழிப்புடன் செயல்படுவதற்கான எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

உலக அளவில் நடந்த இணையத் தாக்குதல்களை அரசாங்கங்களும் அமைப்புகளும் மேலும் விழிப்புடன் செயல்படுவதற்கான எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பெரிய அளவில் நடந்த நச்சுநிரல் தாக்குதலுக்கு அரசாங்கங்களும் பொறுப்பு என்று மைக்ரோசாஃப்ட்டின் தலைவர் பிரேட் ஸ்மித் குறைகூறினார்.

கணினி இயங்குதளங்களில் ஆக அண்மை மாற்றங்களைச் செய்யாததால் "WannaCry" எனும் நச்சுநிரல் பரவியதற்கு வாடிக்கையாளர்களும் காரணம் என்று அவர் சாடினார்.

மைக்ரோசாஃப்ட்டின் பழைய கணினி இயங்குதளங்கள் எளிதில் தாக்கப்படக்கூடும் என்பதை அண்மை இணையத் தாக்குதல்கள் புலப்படுத்தியுள்ளன.

அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கிய நச்சுநிரல், எப்படியோ வெளியே கசிந்து அண்மைப் பிரச்சினை உருவானதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்