Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பியானோ வாசித்து அசத்திய ரஷ்ய அதிபர் புட்டின்

பெய்ச்சிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திக்கக் காத்திருந்த நேரத்தில், பியானோ வாசித்துப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பியானோ வாசித்து அசத்திய ரஷ்ய அதிபர் புட்டின்

(படம்: AP)

பெய்ச்சிங், சீனா : பெய்ச்சிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திக்கக் காத்திருந்த நேரத்தில், பியானோ வாசித்துப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டம் குறித்த இரண்டுநாள் உச்சநிலை மாநாட்டுக்காக அவர் பெய்ச்சிங் சென்றுள்ளார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே, இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரச இல்லத்தில் இருதரப்புப் பேச்சுத் தொடங்குமுன், அங்கிருந்த பியானோவைப் பார்த்த திரு. புட்டின் சட்டென அதை வாசிக்கத் தொடங்கினார்.

அவர் மாஸ்கோவைப் பற்றியும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கைப் பற்றியும், சோவியத் காலப் பாடல்களின் சில பத்திகளையும் வாசித்ததாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய உளவு அமைப்பான KGB-ன் முன்னைய உளவாளியான 64 வயது திரு. புட்டின், ஜூடோ தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.

இதுவரை அவரை வீரதீரமான ஒரு தலைவராக முன்னிறுத்தும் படங்களே அதிகம் வெளியாகி வந்துள்ளன.

இந்தநிலையில், திரு. புட்டினின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்துவதுபோல் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்