Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'16 வயதினிலே'.... கொரோனா கிருமியைப் பரப்பிய பிறந்தநாள் கொண்டாட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், ஓர் இளையரின் 16-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் கிருமிப்பரவல் மையமாக உருவெடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், ஓர் இளையரின் 16-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் கிருமிப்பரவல் மையமாக உருவெடுத்துள்ளது.

கடந்த மாதம் 25-ஆம் தேதி நடத்தப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கூடியிருக்கவேண்டும். ஆனால், 80க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது... 270 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற அனுமதித்த இடத்திற்கு 16,330 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொறுப்புடன் செயல்படும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்