Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப் நிர்வாகத்தின் மீது 16 மாநிலங்கள் கூட்டாக வழக்குத் தொடுத்துள்ளன

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மீது அந்நாட்டின் 16 மாநிலங்கள் கூட்டாக வழக்குத் தொடுத்துள்ளன. 

வாசிப்புநேரம் -
டிரம்ப் நிர்வாகத்தின் மீது 16 மாநிலங்கள் கூட்டாக வழக்குத் தொடுத்துள்ளன

(படம்: AFP/Herika Martinez)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மீது அந்நாட்டின் 16 மாநிலங்கள் கூட்டாக வழக்குத் தொடுத்துள்ளன.

நியூயார்க், கலிஃபோர்னியா, மிச்சிகன் உள்ளிட்ட மாநிலங்கள் அந்தக் கூட்டணியில் உள்ளன.

அதிபர் டிரம்ப், பல பில்லியன் டாலர் செலவில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பத் திட்டமிடுகிறார்.

அதற்கு 5.7 பில்லியன் டாலர் நிதி தேவை என்று கூறினார்.

ஆனால், குறைந்த அளவு நிதி வழங்குவதற்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்க மாநிலங்கள் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக சான் ஃபிரான்சிஸ்கோ மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.

நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது.

அதனை வேறு பணிகளுக்கு மாற்றிவிடும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று எதிர்ப்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு திரு. டிரம்ப் வாக்களித்திருந்தார்.

குற்றங்களையும், சட்டவிரோத போதைப்பொருள்களையும் தடுக்க அந்த எல்லைச்சுவர் அவசியம் என்று திரு. டிரம்ப் கூறுகிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்