Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கைதிகளின் சடலங்களை எரிக்க இடுகாட்டைக் கட்டியதாகச் சிரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சிரியா அரசாங்கம் ராணுவச் சிறைச்சாலையில் கொலைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளின் சடலங்களை எரிக்க இடுகாட்டைக் கட்டியதாய் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிரியா அரசாங்கம்,  ராணுவச் சிறைச்சாலையில் கொலைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளின் சடலங்களை எரிக்க இடுகாட்டைக் கட்டியதாய் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு அந்த இடுகாட்டின் வசதிகளைக் காட்டும் துணைக்கோளப் படங்களை வெளியிட்டுள்ளது.

ஆதாரங்களை மறைப்பதற்கான இடமாகவும் அது பயன்படுத்தப்பட்டதாக அது குறைகூறியது.

டமஸ்கஸுக்கு வெளியில் உள்ள அந்த ராணுவச் சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் துன்புறுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்குச் சிரியா இன்னும் பதிலளிக்கவில்லை.

ஆனால் இதற்கு முன் சிறைச்சாலையில் எவ்வித துன்புறுத்தலும் நடக்கவில்லை என்று சிரியா மறுத்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்