Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் குடிநுழைவுக் கட்டமைப்பு: டிரம்ப்

அமெரிக்காவின் தற்போதைய குடிநுழைவுக் கட்டமைப்பு உள்நாட்டுப் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் தற்போதைய குடிநுழைவுக் கட்டமைப்பு உள்நாட்டுப் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 700,000 குடியேறிகளுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய திரு டிரம்ப்பின் நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

குடியேறிகளின் சொந்த நாடுகள் சிலவற்றைத் திரு டிரம்ப் மிகக் கடுமையாக வர்ணித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அவருக்கு எதிராக அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுந்தன.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட 549 அனைத்துலக பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் நான்கில் மூன்று பங்கு, வெளிநாட்டில் பிறந்தவர்களுடன் தொடர்புள்ளவை என்று அமெரிக்க நீதி, தாயகப் பாதுகாப்பு அமைச்சுகள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டன.

அந்நபர்களில் 148 பேருக்கு, அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. பயங்கரவாதிகளாக இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான பேரைத் தடுத்திருப்பதாக அமைச்சு சொன்னது.

தரத்தின் அடிப்படையில் குடியேறிகளைத் தேர்வு செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகத் திரு. டிரம்ப் கூறினார். அதற்காக நாடாளுமன்றத்திடம் சீர்த்திருத்தங்கள், வளங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றைத் தாம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்