Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மகள் மானபங்கம் செய்யப்பட்டதை அறிந்ததால் தந்தை தற்கொலை

தனது தந்தையின் தற்கொலைக்கு அமெரிக்க சீருடற்பயிற்சிக் குழுவின் மருத்துவர் லேரி நாசர் (Larry Nassar) தான் காரணம் என்று ஒரு பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாசிப்புநேரம் -

தனது தந்தையின் தற்கொலைக்கு அமெரிக்க சீருடற்பயிற்சிக் குழுவின் மருத்துவர் லேரி நாசர் (Larry Nassar) தான் காரணம் என்று ஒரு பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல பெண்களை மானபங்கம் செய்ததாக மருத்துவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றத்தை மருத்துவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் விசாரணையில் அவரால் பாதிக்கப்பட்ட கைல் ஸ்டீஃபன்ஸ் (Kyle Stephens) நேற்று (ஜனவரி 16) நீதிமன்றத்தில் பேசியபோது இவ்வாறு கூறினார்.
லேரி தனது குடும்ப நண்பர் என்றும் தனக்கு 6 வயதாக இருந்தபோது தன்னை மானபங்கம் செய்ய ஆரம்பித்தார் என்றும் கைல் கூறினார்.
இதைக் குறித்து தனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் தன்னை நம்பவில்லை என்றும், பின் உண்மை தெரிந்ததும் தனது தந்தை தற்கொலை செய்துகொண்டார் என்றும் கைல் விளக்கினார்.
லேரியால் பதிக்கப்பட்ட மேலும் சுமார் 100 பெண்கள் நீதிமன்றத்தில் பேச உள்ளனர்.

54 வயது லேரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வாதாடி வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்