Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முன்வந்த வடகொரியா

வடகொரியா, பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமின்றி,  உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொள்ள முன்வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முன்வந்த வடகொரியா

(படம்: AFP)

வடகொரியா, பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமின்றி, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொள்ள முன்வந்துள்ளது.

வடகொரியா, பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமின்றி, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொள்ள முன்வந்துள்ளது.

இரு கொரியாக்களும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விவகாரங்கள் பற்றி கலந்துரையாடிவரும் வேளையில், பியோங்யாங் அதனைப் பரிந்துரைத்தது.

இருதரப்புப் பேச்சுகள் இரண்டாவது வாரமாகத் தொடர்கின்றன. வடகொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு 230 பேர் கொண்ட உற்சாகமூட்டும் குழுவை அனுப்பிவைக்கும் என்று சோல் தெரிவித்தது.

தொடக்க நிகழ்ச்சியில் இருநாட்டுக் குழுக்களும் இணைந்து அணிவகுப்பதன் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படுகிறது.

இரு கொரியாக்களின் விளையாட்டு வீராங்கனைகளைக் கொண்ட ஹாக்கி குழுவைக் களமிறக்குவது குறித்தும் இன்று பேசப்படும்.
இன்றைய பேச்சின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அனைத்துலக ஒலிம்பிக் குழுவுடன் விவாதிக்கப்படும்.

வரும் சனிக்கிழமை இரு கொரியாக்களின் அதிகாரிகளும், சுவிட்சர்லந்தில் ஒலிம்பிக் குழு அதிகாரிகளைச் சந்திப்பர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்