Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வட கொரியாவுடன் போர் மூளக்கூடிய சாத்தியத்தை எதிர்கொள்ள அமெரிக்காவில் ஆயத்தப் பயிற்சிகள்

வட கொரியாவுடன் போர் ஏற்படக்கூடிய சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு  அமெரிக்கா கடுமையான ஆயத்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும், போர் நடக்காது என நம்புவதாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மெக் தார்ன்பெர்ரி இன்று தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -

வட கொரியாவுடன் போர் ஏற்படக்கூடிய சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா கடுமையான ஆயத்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆயினும், போர் நடக்காது என நம்புவதாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மெக் தார்ன்பெர்ரி இன்று தெரிவித்தார்.

போருக்கான ஆயத்தப் பயிற்சிகள் அக்கறைக்குரியவை என்று திரு தார்ன்பெர்ரி தெரிவித்தார். நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்ய முன்வரும் போர்வீரர்களுக்குச் சிறந்த ஆயுதங்களை மட்டுமின்றி சிறந்த பயிற்சியையும் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்றார் அவர். அரசாங்கமும் அவ்வாறே செய்து வருவதாகவும் திரு தார்ன்பெர்ரி சொன்னார்.

இந்நிலையில் வட கொரியாவின் அணுவாயுதத் திட்டம் தொடர்பில் அதன் மீதான நெருக்குதலை அதிகரிக்க அமெரிக்கா, தனது நட்பு நாடுகளை வற்புறுத்தியிருக்கிறது. கனடாவின் வான்கூவர் நகரில் 20 நாடுகளுக்கு இடையிலான கூட்டம் நேற்று நடைபெற்றது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோவும் வட கொரியா மீதான நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க இதர நாடுகளிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆயினும், வடகொரியாவுடனான உறவு குறித்து தென்கொரியா, ஒரளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பதாய் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சீனாவும் ரஷ்யாவும் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்