Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்: வெள்ளை மாளிகை மருத்துவர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்;  ஆனால் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் மருத்துவர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்: வெள்ளை மாளிகை மருத்துவர்

(படம்: Reuters/Jim Bourg)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்; ஆனால் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் மருத்துவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் குறிப்பிட்டார்.

அவர் பதவியில் இருப்பதற்கான மனத்திடத்தைக் கொண்டிருக்கிறாரா என்பது குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதிபர் டிரம்ப் அறிவாற்றல் சோதனைக்கு உட்பட முடிவு செய்தார்.

சோதனை முடிவுகளை வெளியிடவும் மருத்துவருக்கு அவர் அதிகாரம் கொடுத்தார்.

அந்த முடிவுகள், பதவியில் நீடிப்பதற்கான மனத்திடம் அவருக்கு இருப்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுவதாய்க் கூறப்பட்டது.

இருப்பினும், அவரின் உடல்நலம் மேலும் மேம்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் 4.5இலிருந்து 6.8 கிலோகிராம் வரை எடை குறைய வேண்டும் என்றும் உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.

பொரித்த உணவுகளை விரும்பிச் சாப்பிடும் அதிபர் டிரம்ப், கோல்ஃப் (Golf) விளையாடுவதைத் தவிர்த்து வேறு உடற்பயிற்சிகளைச் செய்வதில்லை என்றும் தெரியவந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்