Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவின் 66 பில்லியன் டாலர் கப்பல் கட்டுமானத் திட்டம்

ஆஸ்திரேலியா, 66 பில்லியன் டாலர் மதிப்பிலான கப்பல் கட்டுமானத் திட்டத்தை அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியா, 66 பில்லியன் டாலர் மதிப்பிலான கப்பல் கட்டுமானத் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதுவே அந்நாட்டின் ஆகப் பெரிய அமைதிக்காலக் கடற்படை முதலீடு.

அந்தத் திட்டத்தை ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. மால்க்கம் டர்ன்புல் அறிவித்தார்.

கப்பல் கட்டுமானத்துறையில் 5 ஆயிரம் வேலைகளும் தொடர் விநியோகத்தில் சுமார் 10 ஆயிரம் வேலைகளும் அதன் மூலம் உருவாகும் என்று அவர் கூறினார்.

திட்டத்தின்கீழ், DCNS எனும் ஃபிரெஞ்சுக் கடற்படைக் குத்தகை நிறுவனத்திடமிருந்து 12 புதிய நீர்மூழ்கிகளை 37 பில்லியன் டாலர் செலவில் ஆஸ்திரேலியா வாங்கவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்