Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'புட்டின் மீண்டும் அதிபராவார்': கவனிப்பாளர்கள்

ரஷ்யாவில் இன்று பொதுத் தேர்தல்.

வாசிப்புநேரம் -

ரஷ்யாவில் இன்று பொதுத் தேர்தல்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்நாட்டில் 11 வெவ்வேறு நேரங்கள் உள்ளன. ரஷ்யாவின் தூரக்கிழக்கில் தேர்தல் சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கியது.

ஐரோப்பிய ஒன்றியப் பகுதியுடனான எல்லையிலுள்ள காலினினின்கிரேட்டில் தேர்தல் சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 2 மணிக்கு முடிவடையும்.

ரஷ்ய அதிபர் மாளிகை. (படம்: Reuters)

சட்டரீதியான காரணங்களுக்காகத் திரு. புட்டினை எதிர்த்துப் போட்டியிடவிருந்த அலெக்ஸெய் நவால்னி தேர்தலில் கலந்துகொள்ள தடை செய்யப்பட்டிருக்கிறார். எனவே வெற்றி திரு. புட்டின் பக்கம் என்பது தெரிந்ததே என கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பதில்தான் ஊகங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
18 ஆண்டுகளாய்ப் பிரதமரும் அதிபருமாக இருந்துவந்த திரு. புட்டினுக்காக ஆர்வத்துடன் வாக்களிக்கத் திரள்வோரின் எண்ணிக்கை குறையலாம் என்று நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்