Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெளிர்நிறத் தோல் நோயாளிகளுக்கான அழகிப் போட்டி

வெளிர்நிறத் தோல் கொண்ட அழகிப் போட்டியில் ஸிம்பாப்வே அழகி வெற்றிபெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
வெளிர்நிறத் தோல் நோயாளிகளுக்கான அழகிப் போட்டி

(படம்: AFP)

வெளிர்நிறத் தோல் கொண்ட அழகிப் போட்டியில் ஸிம்பாப்வே அழகி வெற்றிபெற்றுள்ளார். அவர் 22 வயது சிதெம்பிஸோ முட்டுக்குரா. தோல் வெளிர்நிறமாக இருந்தாலும் அவரது முகத்தில் வெறும் தன்னம்பிக்கை மட்டுமே நிறைந்திருக்கிறது.

வெளிர்நிறத் தோல் நோயாளிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவே தாம் போட்டியில் கலந்துகொண்டதாகக் குமாரி முட்டுக்குரா தெரிவித்தார்.அந்நோய் உள்ளவர்களை மற்றவர்கள் தாழ்வாகக் கருதினாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறப் பாடுபடவேண்டும் என்பது அவரது விருப்பம்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில், மூட நம்பிக்கை நிறைந்திருக்கும் சில நாடுகளில் வெளிர்நிறத் தோல் நோயாளிகள், மந்திரவாதிகளுக்குப் பலியாகின்றனர். அப்படி இருக்கும் சூழலில் நோயாளிகளுக்குத் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்ட போட்டி முனைவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்