Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பழுது இருந்தது 'அதிகாரிகளுக்கு முன்பே தெரியும்'

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பழுது இருந்தது அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்று புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பழுது இருந்தது 'அதிகாரிகளுக்கு முன்பே தெரியும்'

(படம்: REUTERS/Joe Skipper/File Photo )

மயாமி: அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பழுது இருந்தது அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்று புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலம், இரண்டு நாட்களுக்கு முன்னர் இடிந்து விழுந்ததில் ஆறு பேர் மாண்டனர்.

மேம்பாலத்தில் காணப்பட்ட பிளவு, ஆபத்தை விளைவிக்கக்கூடியதல்ல என்று பொறியாளர்களும் மாநில அதிகாரிகளும் அப்போது எண்ணினர்.

கட்டடத்தின் வடிவமைப்பு குறித்துப் பேசுவதற்காகக் கூடிய அதிகாரிகள் அங்கிருந்து சென்ற மூன்று மணி நேரத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது.

950 டன் எடை கொண்ட மேம்பாலத்தின் இடிபாடுகள் சில வாகனங்களின்மீது விழுந்தன. சாலைச் சந்திப்பில் அந்த வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன.
மேம்பாலம் 14.2 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்