Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போதைப்பொருளை அன்னாசிப் பழத்தில் வைத்துக் கடத்த முயற்சி

போர்ச்சுகல், ஸ்பானியக் காவல்துறையினர் 700 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

போர்ச்சுகல், ஸ்பானியக் காவல்துறையினர் 700 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

கடத்தல்காரர்கள் போதைப்பொருளை அன்னாசிப் பழத்துக்குள் வைத்துக் கடத்த முயன்றனர் .

தென் அமெரிக்காவிலிருந்து போதைப்பொருளைக் கடத்த முயன்ற அந்தக் கும்பலின் 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கப்பல் கொள்கலன்கள் மூலம் கடத்தல் முயற்சி இடம்பெற்றது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தயாரிக்கப்பட்ட ஓரிடமும் கண்டுபிடித்து அகற்றப்பட்டது.

ஐபீரியத் தீபகற்பத்தில் போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தென் அமெரிக்காவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்கள் பெரும்பாலும் அவ்வழியாகவே ஐரோப்பாவுக்குள் நுழைகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்