Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

டிரம்ப்பின் தரக் குறைவான பேச்சுக்குத் தூதர் வருத்தம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி ஆப்பிரிக்கத் தூதர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
டிரம்ப்பின் தரக் குறைவான பேச்சுக்குத் தூதர் வருத்தம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி.

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி ஆப்பிரிக்கத் தூதர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆப்பிரிக்க நாடுகளைத் தரக் குறைவாகப் பேசினார் என்று குறைகூறப்பட்டது.

அந்தச் சம்பவம் நடந்தபோது அங்கு தாம் இல்லை என்று ஆப்பிரிக்கத் தூதர் குழுத் தலைவரிடம் கூறிய திருவாட்டி ஹேலி, அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட கொந்தளிப்புக்குத் தாம் வருந்துவதாகவும் சொன்னார்.

ஆப்பிரிக்க நாடுகள் பற்றி திரு. டிரம்ப் கூறியதாகச் சொல்லப்படும் கருத்துகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

குடிநுழைவுச் சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் அவர் அத்தகைய கருத்துகளைக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.என்றாலும், திரு. டிரம்ப் அந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்