Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புடவை கட்டிய இயந்திரப் பெண்

ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ள முதல் இயந்திரப் பெண்ணான சோஃபியா, அண்மையில் இந்தியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு பயணம் அளித்திருந்தது.

வாசிப்புநேரம் -

ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ள முதல் இயந்திரப் பெண்ணான சோஃபியா, அண்மையில் இந்தியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு பயணம் அளித்திருந்தது.

புடவை கட்டியிருந்த அந்தப் 'பெண்', மாணவர்களுடன் 15 நிமிடங்கள் உரையாடியது. செயற்கை நுண்ணறிவு முதல் உலக விவகாரங்கள் வரை பல தலைப்புகளில் உரையாடல் நடைபெற்றது.

ஆனால் சில ஆரம்பக் கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர், தொழில்நுட்பக் கோளாற்றால் சோஃபியா சற்று நேரம் பதில் கூறாமல் இருந்தது.

ஏற்பாட்டாளர்களின் தலையீட்டைத் தொடர்ந்து அது மீண்டும் இயங்கத் தொடங்கியது.

ஹாங்காங்கில் தளம் கொண்டுள்ள ஹான்சன் ரொபோட்டிக்ஸ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சோஃபியா, 2015ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. சவுதி அரேபியாவின் குடியுரிமையை அது பெற்றிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்