Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போதைப் பொருள் விற்பனைக்கு மரண தண்டனை விதிக்குமா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான திட்டத்தை அறிவிக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
போதைப் பொருள் விற்பனைக்கு மரண தண்டனை விதிக்குமா அமெரிக்கா?

(படம்: AFP/Robyn Beck)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான திட்டத்தை அறிவிக்கவிருக்கிறார்.

திட்டம், போதைப் பொருள் கடத்துவோருக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தும்.

போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான நெருக்கடியைக் கையாள அந்தத் திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில், மருத்துவர்கள் சிகிச்சைக்கு "Opium"ஓபியத்தைப் பரிந்துரைப்பது மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படவேண்டும் என்றும் வெள்ளை மாளிகை வலியுறுத்துகிறது.

New Hampshireஇல் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது பரிந்துரைகள் குறித்துக் கோடிகாட்டுவார் எனத் தகவல்கள் கூறின. அந்த வட்டாரம் போதைப்பொருள் புழக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒன்று. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்