Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கலிபோர்னியாவின் விநியோக நிலையத்தில் துப்பாக்கிச்சூடு- இருவர் மரணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரெட்பிளஃப் (Redbluff)நகரில் உள்ள பேரங்காடிகளுக்கான விநியோக நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கலிபோர்னியாவின் விநியோக நிலையத்தில் துப்பாக்கிச்சூடு- இருவர் மரணம்

(படம்: AFP)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரெட்பிளஃப் (Redbluff)நகரில் உள்ள பேரங்காடிகளுக்கான விநியோக நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் இருவர் மாண்டனர்.

வால்மார்ட் (Wal-Mart) பேரங்காடிகளுக்குப் பொருள்களை அனுப்பும் விநியோக நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 3 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக ஒருவர் கூறினார்.

நிலையத்திற்குள் திடீரென்று நுழைந்த கார் ஒன்றிலிருந்து ஒருவர் சுட்டதாக CNN செய்தி நிறுவனத்திடம் கூறப்பட்டது.

பின்னர் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறின.

அமலாக்க அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்துவருவதால், வால்மார்ட் பேரங்காடி அதிகாரிகள் மேல்விவரம் தர மறுத்துவிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்