Images
  • koreas
    (படம்:AFP/Korea Summit Press Pool)

இரு கொரியாக்களுக்குமான புதிய கூட்டுத் தொடர்பு அலுவலகம்

இரு கொரியாக்களும் அவற்றுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள மேலும் ஒரு படி எடுத்துவைத்துள்ளன.

இரு தரப்பும் இணைந்து அமைத்துள்ள, கூட்டுத் தொடர்பு அலுவலகத்தை இன்று அவை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

வடகொரிய எல்லை நகரான கேசொங்கில் அது அமைந்திருக்கும்.

இரு தரப்பு ஒத்துழைப்புக்கான தொடர்பு-வழியாக அந்த அலுவலகம் செயல்படும்.

எல்லா நாட்களிலும், 24 மணி நேரமும் செயல்படவிருக்கும் அத்தகைய தொடர்பு அலுவலகம் குறித்த யோசனையை, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கொரிய உச்சநிலைச் சந்திப்பில் இருநாட்டுத் தலைவர்களும் அங்கீகரித்தனர்.

இரு நாட்டு ஒருங்கிணைப்புத் துணையமைச்சர்கள், வாரம் ஒரு முறை சந்தித்து, மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துபேசுவர் என்று யொன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. 

Top